எச்-1 பி விசா புதுப்பிப்பதில் அதிரடி மாற்றம்.. அமெரிக்க அரசின் முடிவால் வெளிநாட்டினர் மகிழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பணி புரியும் ஹெச்-1பி  (H1B) வகை விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் 2004ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை 'ஸ்டாம்பிங்' செய்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் 'ஸ்டாம்பிங்' பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அமெரிக்க அனுமதிப்பதில்லை.

இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலை நீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விசாவை புதுப்பித்த பிறகுதான் அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டும்.

இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முறையிட்ட வந்தனர். தற்பொழுது அமெரிக்காவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் விசா புதுப்பிக்கும் முறை மாற்றப்படும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

 

அதன்படி, இந்தியர்கள் உட்பட மற்ற வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்-1 பி விசாவுடன் 6 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் பணியாற்றினால் அவர்களால் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Changes in H1B Visa Renewal Procedure


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->