ஐபோன் 15 வாங்கியது வீணா போச்சு.! வருத்தத்தில் வாடிக்கையாளர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஐபோன் 15 வாங்கியது வீணா போச்சு.! வருத்தத்தில் வாடிக்கையாளர்கள் - நடந்தது என்ன?

உலகின் தலைசிறந்த மற்றும் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் 'ஐபோன் 15' மற்றும் 'ஐபோன் 15 ப்ரோ' உள்ளிட்ட இரண்டு மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது. 

புதிதாக வெளிவந்த இந்த செல்போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்த செல்போன்களில் பி.எஸ்.என்.எல். சிம்மை பயன்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள், 'ஐபோன் 14' மாடல் வெளியான போதும் இதேபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக தெரிவிக்கின்றனர். 

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட சிம்கள் சப்போர்ட்  ஆகும் நிலையில், பொதுத்துறை நிறுவனத்தின் பி.எஸ்.என்.எல். சிம் சப்போர்ட் ஆகாததால், அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர். இந்த குறைபாட்டை விரைவில் சரி செய்து தர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL simcard not work in iphone 15 cellphone


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->