போப் பிரான்சிஸ் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார்.! - Seithipunal
Seithipunal


போப் பிரான்சிஸ் (வயது 86) சுவாச நோய் தொற்றால் அவதிப்பட்டு வருவதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

மேலும், போப் பிரான்சிஸ் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே போப் பிரான்சிஸ் குணமடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் சுவாச தொற்றுநோய் காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bop Francis cure and discharge in hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->