உடல்நலம் தேறி வரும் போப் பிரான்சிஸ்.. விரைவில் டிஸ்சார்ஜ்.! - Seithipunal
Seithipunal


போப் ஆண்டவர் குணமடைந்து வருகிறார் என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86). இவர் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதில், போப் பிரான்சிஸ் ஹெர்னியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

இதனையடுத்து ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ்க்கு கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர், போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுப்பதாகவும் பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உடலில் தொந்தரவுகள் எதுவுமின்றி தொடர்ந்து உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bob Francis recovery from health discharge soon


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->