ஆஸ்திரேலியா || கூண்டிலிருந்து தப்பிய ஐந்து சிங்கம்.! பதற்றத்தில் ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஒன்றுள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் நேற்று காலை பார்வையாளர்களுக்காக அனுமதி வழங்கும் முன்பு ஊழியர்கள் வழக்கம்போல் விலங்குகளை ஆய்வு செய்து வந்தனர். 

அந்த ஆய்வின் போது, கூண்டில் இருந்த ஐந்து சிங்கங்கள் காணாமல் போனதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஐந்து சிங்கங்களும் கூண்டிலிருந்து வெளியேறி தப்பியோடியது தெரியவந்தது. 

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சிங்கம் தப்பிய சமயத்தில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் யாரும் இல்லை. இருந்தாலும், அவர்களின் பாதுகாப்பு கருதி பூங்கா உடனடியாக பூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, கூட்டிலிருந்து தப்பிய சிங்கங்களை தேடும் பணியில் பூங்கா ஊழியர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். 

அதன்பின்னர், சிறிது நேரத்திலேயே பூங்காவுக்கு அருகே சுற்றிதிரிந்து கொண்டிருந்த சிங்கங்களை பூங்கா ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த சிங்கங்களை ஊழியர்கள் பாதுகாப்பாக கூண்டுக்கு கொண்டு சென்றனர். 

மேலும், அந்தக் கூண்டில் இருந்து சிங்கங்கள் அனைத்தும் எப்படி தப்பிச் சென்றது என்ற கோணத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதே போல் கடந்த 2009ம் ஆண்டு சிட்னியில் உள்ள மற்றொரு உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கம் ஒன்று தப்பி சென்றதும், அது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியதனால், அவை சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austreliya wild animal zoo five lions escap


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->