பிரபல கிரிக்கெட்டரை கடத்தி அடித்து விடுவித்த கும்பல்...! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவட் மெக்கில். இவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வீட்டிற்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதன்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், ஸ்டூவட் மெக்கிலை கடத்தி சென்றுள்ளது.

இதனையடுத்து, காரில் சிட்னி நகரின் மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று மிரட்டிய நிலையில், ஒரு மணிநேரத்திற்கு கடுமையாக தாக்கி விடுதலை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மெக்கில் நியூ சவுத்வேல்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்டூவட் மெக்கிலை கடத்தி சென்று தாக்கிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், ஸ்டூவட் பணத்திற்காக கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. 

மேலும், சம்பவம் நடைபெற்ற 4 நாட்களுக்கு பின்னர் ஸ்டூவட் மெக்கில் 20 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான தகவல் தற்போது காவல் துறையினரானால் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian Cricketer Stuart MacGill Kidnapped and Released news


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->