வானில் சுடப்பட்ட 4 மர்ம பொருட்கள்...ஏலியன்ஸ் வருகையா..? அமெரிக்க மக்கள் பீதி..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சீனாவின் உளவு பலூன் ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க தன் வான் பரப்பை அதி தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தின் மீது பறந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த மர்ம பொருள் 40,000 அடி உயரத்தில் கார் வடிவில் உருளைப் போன்று வேகமாக பறந்து கொண்டிருந்த பொருளை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது.

இந்த மர்ம பொருள் தொடர்பான பாகங்களை சேகரித்த அமெரிக்க பாதுகாப்பு துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று அமெரிக்கா-கனடா எல்லை பகுதியான ஹுரோன் ஏரிக்கு மேல் 20000 அடி உயரத்தில் அக்டோகோனல் வடிவம் கொண்ட மர்ம பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. 

அமெரிக்கா மற்றும் கனடா எல்லை வான்  பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் மர்ம பொருட்கள் தென்படுவதால் ஏலியன்கள் வருகை அல்லது ஏலியன்களின் உளவுப் பொருட்களாக இருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆதாரமற்ற யூகமாக இருந்தாலும் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அலாஸ்கா உட்பட சில மாகாணங்களின் வான் வழியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மர்ம பொருட்கள் தோன்றுவதால் விமான போக்குவரத்தில் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா வான் பகுதிகளை அமெரிக்க பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் வானில் தோன்றும் மர்ம பொருட்களால் அமெரிக்க மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் ஏலியன்ஸ் வருகையாக இருக்க கூடும் என நம்புவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American people afraid of.arrival of aliens due to UFO


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->