எத்தனை காலமானாலும் உக்ரைன் மக்களுடன் துணை நிற்போம் - அமெரிக்கா - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் கிரீமியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ராணுவம் தொடர்பான போக்குவரத்து தடைப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய படையினர், உக்ரைன் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறன.

இந்நிலையில் தலைநகர் கீவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இன்று காலை குடிமக்கள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் ரஷ்ய படையினரால் கண்டிக்கத்தக்க வகையில் தாக்குதல் நடைபெற்றது என்றும், தாக்குதலிலிருந்து மீண்டும் எழக்கூடிய உக்ரைன் மக்களின் வலிமை மற்றும் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும், எத்தனை காலமானாலும் உக்ரைன் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America will stand with Ukraine people no matter how long it will take


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->