பாகிஸ்தான் செல்வதற்கு முன் மக்கள் யோசிக்க வேண்டும்.! அமெரிக்கா அறிவுரை.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக பாகிஸ்தானில், பலுசிஸ்தான், கைபர் பக்துங்க்வா மற்றும் அதன் சுற்றியுள்ள மாகாணங்களில் பயங்கரவாதம் மற்றும் மதவெறி தொடர்பான வன்முறைகள், துப்பாக்கி முனையில் மிரட்டல், ஆள் கடத்தல்கள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க குடிமக்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்பாக தங்கள் முடிவை நன்றாக யோசிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் பலுசிஸ்தான், கைபர் மாகணங்களுக்கு செல்பவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America says people should reconsider their decision before going to Pakistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->