இந்திய பெண்ணுடன் பேஸ்புக்கில் விளையாடிய அமெரிக்க பேராசிரியர் - ரூ.39 லட்சம் பணம் பறிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் நபர் ஒருவர், இந்தியாவில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்தார்.

இருவருக்கிடையே உள்ள நட்பு நாளடைவில் ஆழமான நட்பாகி மாறியது. இதனால், இருவரும் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக நடந்துகொள்வதுமாக இருந்துள்ளனர்.

இந்தத் தகவலை தொழில்நுட்ப வசதியின் மூலம் அறிந்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதனைத் தனக்கு சாதகமாக முடிவு செய்த அந்த நபர், அமெரிக்க பேராசிரியரை தொடர்பு கொண்டு, " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, ஆபாசமாக நடந்துக் கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். 

இதை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இதற்காக கொஞ்சம் பணத்தை ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என்று இ-மெயில் மூலமாக மிரட்டி உள்ளார்.

இவ்வாறு பேராசிரியரிடம் இருந்து 48 ஆயிரம் அமெரிக்க டாலரை அதாவது ரூ.39 லட்சம் பணத்தை மிரட்டியே வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் பேராசிரியரை மிரட்டுவதை நிறுத்தவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம், இந்தியர் ஒருவரால் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரை மத்திய புலனாய்வு அமைப்பினர், டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்ததையடுத்து, ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டு பல முக்கிய தடயங்களை கைப்பற்றி ராகுல் குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், டெல்லி ரவுஸ் அவினியு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America professor chatting with indiam woman thirty nine lakhs amount cheating


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->