159 பேரை 4 நாட்களாக மீட்கும் அதிகாரிகள்.. 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பதைபதைப்பு சி.சி.டி.வி. காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள மியாமி (Miami) நகரின் கடற்கரையோரம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. தனியார் தங்கும் ரிசார்ட் மற்றும் குடியிருப்பு வளாகமாக செயல்பட்டு வந்த அந்த அடுக்குமாடி கட்டிடம், கடந்த ஜூன் 24 ஆம் தேதி அங்குள்ள நேரப்படி நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த உள்ளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், கூடுதலாக 80 பேர் கொண்ட தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 159 பேரின் நிலைமை என்ன என்று தற்போது வரை உறுதியான தகவல் இல்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் 159 பேரின் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

விபத்து நடந்து கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆகிவிட்டதால், இடிபாடுகளில் சிக்கியிருந்தால் பசி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழக்க நேரிடும் என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களில் துர்நாற்றம் ஏற்பட தொடங்கும் என்ற அச்சமும், இதனால் நோய்தொற்று பரவும் அச்சமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இன்று (28/06/2021) இந்த கட்டிட விபத்து எப்படி நடைபெற்றது?. கட்டிடங்கள் எப்படி இடிந்து விழுந்தது? என்பது தொடர்பான சி.சி.டி.வி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில், 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நொடியில் தரைமட்டமான விடியோக்கள் பதிவாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Miami Beach Building Collapse Rescue Operation Under 4 Day Continue Accident CCTV Footage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->