பாகிஸ்தானுக்கு எந்த உதவியும் கிடையாது - ஆப்படித்த அமெரிக்கா..!! - Seithipunal
Seithipunal


உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பல உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறான உதவியை பெரும் நாடாக பாக்கிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா நிதிஉதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வந்தது. 

ஆனால், நிதியை பெற்றுக்கொண்ட பாக்கிஸ்தான், தொடர்ந்து பயனராவத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலி மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியது. 

கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி மாதம் முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொறுப்பேற்ற அதிபர் ஜோ பைடனும், பாகிஸ்தானின் மீது முந்தைய அரசு விதித்த தடைகள் மற்றும் உதவிகள் தொடர்பான விஷயங்கள் அப்படியே தொடரும் என்று தெரிவித்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி, " பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அப்படியே தொடரும். எதிர்காலத்தில் மாற்றங்கள் இருக்குமா? என்பதை இப்போது உறுதியாக கூற இயலாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Dissolve Help to Pakistan about Against Terrorism 26 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->