6 வயது சிறுவன் உடலில் 26 இடங்களில் கத்திகுத்து காயம்: முதியவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, சிகாகோ பகுதியில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். 

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திடீரென பெண்ணையும் அவரது மகனையும் சரமாரியாக கத்தியால் தாக்கினார். 

6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொண்டே இருந்ததில் சிறுவனின் உடலில் 26 இடங்களில் கத்துகுத்து காயம் ஏற்பட்டது. 

இதனால் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பறித்தபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பெண் மகனை காப்பாற்ற முதியவருடன் போராடிய போது முதியவர் அவரையும் கத்தியால் குத்தினார். 

பின்னர் அங்கிருந்து முதியவர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம் பெண் உயிருக்கு போராடிய நிலையில் செல்போன் மூலம் போலீசாருக்கும் அவரது கணவருக்கும் தகவல்தெரிவித்தார். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும் சிறுவனையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுவனின் தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜோசப் சுபா என்பவரை கைது செய்தனர். இவர் நில உரிமையாளராக இருக்கிறார். 

இவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் எதிரொலி காரணமாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக முதியவர் வாக்குமூலம் அளித்தார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 year boy murder case elderly man arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->