கனடாவை தாக்கிய பனிப்புயல்.! சாலையில் பஸ் கவிழ்ந்ததில் 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலால் பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து, அண்டை நாடான கனடாவையும் பனிப்புயல் தாக்கியுள்ளது.

இதில் கனடாவின் மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பல மாகாணங்களை பனிப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, சாலை முழுவதும் பனிக்கட்டியாக மாறி இருந்ததால் பஸ் சறுக்கி, பலமுறை உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் வயதானவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 died in bus accident in Canada due to snowstorm


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->