பாகிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு - 28 பேர் பலி, 150 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று மசூதிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் பெஷாவர் காவல் தலைமையகத்திற்கு அருகே உள்ள மசூதியில் வழக்கம் போல் இன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது மதியம் 1.40 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொழுகையின் போது ஒரு தற்கொலை குண்டுதாரி ஒருவர் மசூதிக்குள் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் மசூதியின் மேற்கூரை மற்றும் சுவர் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு படையினர் காயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மார்ச் மாதம், பெஷாவரில் உள்ள சிறுபான்மை ஷியைட் மசூதியில் ஐஎஸ் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 killed and 150 injured in Pakistan mosque blast


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->