காலநிலை மாற்றத்தினால் 223 நோய்கள் மோசமடைந்ததுள்ளது - வெளியான ஆய்வறிக்கை.! - Seithipunal
Seithipunal


மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தொற்று தற்போது இந்தியா, அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஐரோப்பியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் தொற்று உடனான போராட்டத்தை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. 

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம் காணப்பட்டு வருகிறது. இதனை போன்றே அமெரிக்கா தீவிர காட்டுத் தீயை எதிர்கொண்டுள்ளது. 

இதே சமயம் உலகின் மற்ற சில நாடுகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்த வானிலை மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றங்கள் தான் முக்கிய காரணம். 

இந்த நிலையில், நோய் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதாக என ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

அந்த ஆய்வின் முடிவில் 58 சதவீதம் தொற்று நோய்கள் பரவுவதற்கு பருவநிலை மாற்றம் வழிவகுத்துள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 286 நோய்ககளில் 223 நோய்கள் காலநிலை மாற்றத்தினால் மோசமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை இல்ல விளைவை குறைத்து பருவநிலை மாற்றத்தைத் தடுக்கவில்லை என்றால் நோய் பரவல் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

223 diseases have worsened due to climate change published research


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->