கனடாவில் துப்பாக்கிச்சூடு - 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற சந்தேக நபரும் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அதிகாரிகள், எட்மண்டன் படையில் எட்டரை ஆண்டுகளாக பணியாற்றிய டிராவிஸ் ஜோர்டான் (35) மற்றும் ஐந்தரை ஆண்டுகளாக அதிகாரியாக இருந்த பிரட் ரியான் (30) என்று அடையாளம் கண்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ஒவ்வொரு நாளும், மக்களைப் பாதுகாப்பதற்காக, காவல்துறை அதிகாரிகள் தங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். இரண்டு எட்மண்டன் காவல்துறை அதிகாரிகள் பணியின் போது கொல்லப்பட்ட செய்தி அந்த யதார்த்தத்தை நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Edmonton police officers killed in shooting in Canada


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->