பர்கினோ பாசோவில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


வடக்கு பர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவின் வடக்கு பிராந்தியத்தின் தலைநகரான உவாகிகவ்யாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள், வடக்கு பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் மார்ச் 31 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் புர்கினா பாசோவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 killed in shooting in Burkina Faso


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->