என்னுடைய அடுத்த படம் மாவோயிஸ்டுகள் பற்றியது! பற்றவைத்த கேரளா ஸ்டோரி இயக்குநர்! - Seithipunal
Seithipunal


சுதிப்டோ சென் தன்னுடைய அடுத்த படம், நாட்டில் தற்போது செயல்படும் ஒரு மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது என்று தெரிவித்துள்ளார்.அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இந்த படத்தை விபுல்ஷா தயாரிக்கிறார். இவர் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த "தி கேரளா ஸ்டோரி , என்ற படம் இரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

 சுதிப்டோசென் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த தி கேரளா ஸ்டோரிஸ் படம், அம்மாநிலத்தை , சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

தென்னிந்தியாவில் பெருசா பேசப்படாத இந்தப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. மொத்தம் ரூ.240 கோடி வரை இந்தப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது .

இதைத்தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் தன்னுடைய, அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் “எனது அடுத்த படம் இந்தியாவில் சுமார் ஐம்பது ஆண்டுகள் தாண்டி செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது. இந்தப் படத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் விபுல் ஷாவுக்காக இயக்கவுள்ளேன். அவருடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My next film is about Maoists


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->