கேரளா | 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளத்தின் 8 மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் போன்ற பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல அணைகளில் நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA RED ALERT FOR HEAVY RAIN JULY


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->