இன்னும் சற்று நேரத்தில்.. "சென்னை மக்களே" உஷார்.. வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் எனவும், அதே போன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி இன்று கடலூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், ராணிப்பேட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதேவேளையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் சூழல் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain will fall in Chennai and surrounding areas soon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->