ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கியது.! - Seithipunal
Seithipunal


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் என்னும் அம்சம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் ஹார்மனி ஒஎஸ் 3.0 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huawei has developed its own Harmony OS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->