வீடியோ காலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியை  சேர்ந்த இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பி மிரட்டல் விடுத்த  சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சேர்ந்த திலீப் குமார் என்ற இளைஞர் (வயது 25), புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் திலீப் மாரை விட்டு விலக முடிவு செய்துள்ளார். இதில் ஒரே ஒருமுறை வீடியோ காலில் வந்து நிர்வாணமாக முழு உடலையும் காட்டும்படி இளைஞர் கெஞ்சி கேட்டுள்ளார். மேலும் அதன் பிறகு முற்றிலும் விலகி விடுவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை நம்பி வந்த இளம்பெண்ணும் வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்த இளைஞர், நிர்வாண வீடியோவை வைத்து இளம் பெண்ணை மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிளாக் மெயில் செய்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இளைஞர் திலீப் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Man blackmail to marry girl in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->