வார விடுமுறை.. தமிழகம் முழுவதும் நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


வார விடுமுறையொட்டி தமிழகத்தில் நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் தான் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வார இறுதி நாட்களையொட்டி நாளை தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பரிசு பெறுங்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகள், மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை வரும் மக்களுக்காக அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weekend holiday 600 special Bus service


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->