மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று முதல் இது கட்டாயம்..மெட்ரோ நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், மால்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wear mask in metro railway station in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->