விவேக் மாரடைப்பைக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா.?! மருத்துவனை நிர்வாகம் கூறியது என்ன.?!  - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

அத்துடன் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றார். இத்தகைய சூழலில், இன்று காலை நடிகர் விவேக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விவேக்கின் ரசிகர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரபலங்களும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நடிகர் விவேக்குக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது தான் அவரது மாரடைப்புக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல்நலக் குறைவுக்கு அவருடைய கொரோனா தடுப்பூசி காரணமில்லை. அவர், சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்குக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vivek heart attack reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->