வேலூர் | பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாம்பு கடி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே பள்ளி வளாகத்தில் மாணவியை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது:

வேலூர்: குடியாத்தம் அருகே ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகள் பூர்விகா வயது 13. 

இவர் ஒலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கழிவறை அருகே பாம்பு பதுங்கி இருப்பது தெரியாமல் சென்ற மாணவியை பாம்பு கடித்து விட்டது. வலியால் கத்தி கூச்சலிட்ட மாணவியை ஆசிரியர்கள் மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர்கள் இருக்கிறதா? அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா? என பல்வேறு கோணத்தில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velour government school student snake bit


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->