மணல் கொள்ளை தடுத்த விஏஓ மீது தாக்குதல்!! சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் மணல் கொள்ளையை தடுக்க சென்றபோது தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காளையர்கோயில் தாலுகாவுக்கு உட்பட்ட பூவாளி கிராம விஏஓ சேகருக்கு ஏனாவரம், புதுப்பட்டியில் கிராவல் மண் கடத்துவதாக தகவல் சென்றுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விஏஓ சேகர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த விஏஓ சேகரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணி பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளையர்களால் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO attacked by sand robbers in Sivaganga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->