நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..! - Seithipunal
Seithipunal


நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. 

இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட இருப்பதாக அதன் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதன்படி, பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சென்னை, கோவை, ஓசூர், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட 14 மாநகராட்சி பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urban local body election bjp first phase candidate list released


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->