சென்னை மக்களுக்கு குட் நியூஸ்... ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள் மற்றும் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இதனை தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீண்ட நாட்களாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக மக்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் கோரிக்கை ஏற்று சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் "சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் ஜி அவர்களுக்கு மிக்க நன்றி" என பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister announced Tejas train will stop at Tambaram


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->