சேலம் || இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ வேன் மோதி விபத்து - தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சேனைகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (53). இவர் தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விஜயன் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே சென்ற போது எதிரே வந்த மினி டெம்போ வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் விஜயன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கருப்பூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler mini tempo accident in salem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->