திருப்பூர் || தயிர் வெங்காயம் தர மறுத்த புரோட்டா மாஸ்டர்- புரட்டி எடுத்த உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தயிர் வெங்காயம் தர மறுத்த புரோட்டா மாஸ்டர்- புரட்டி எடுத்த உடன்பிறப்புகள்.!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு ராமு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணி புரிந்து வருகிறார்.

இந்த ஓட்டலில் மகாலட்சுமி நகரில் வசிக்கும் செல்வகுமாரின் மகன் அருண் பிரசாத் மற்றும் சஞ்சய் உள்ளிட்டோர் அடிக்கடி சாப்பிட்டும், பார்சல் வாங்கியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் சஞ்சய் வழக்கம்போல் இன்று புரோட்டா பார்சல் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அங்கு மாஸ்டர் ராமு பார்சல் கட்டி கொடுத்துள்ளார்.

அப்போது சஞ்சய் பரோட்டாவுக்கு தயிர்வெங்காயம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் ராமு தயிர் வெங்காயம் இல்லை என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மாஸ்டர் ராமு சஞ்சயை தாக்கியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற சஞ்சய் தனது அண்ணன் அருண் பிரசாத்திடம் ஓட்டலில் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அருண் பிரசாத் தனது தம்பியுடன் ஓட்டலுக்கு வந்து தனது தம்பியை தாக்கிய மாஸ்டர் ராமுவையும், ஓட்டலின் உரிமையாளர் பழனியாண்டியையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே அருண் பிரசாத் புரோட்டா மாஸ்டரையும், ஓட்டல் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths attack purotta master in tirupur palladam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->