அதிரடியாக உயர்ந்த சுங்கத் சாவடி கட்டணம் - அதிருப்தியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


அதிரடியாக உயர்ந்த சுங்கத் சாவடி கட்டணம் - அதிருப்தியில் பொதுமக்கள்.!

தமிழகம் முழுவதும் உள்ள 54 சுங்கச் சாவடிகளுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பிரிவாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. அதில், முதல்கட்டமாக 24 சுங்கச்சாவடிகளில் இந்த ஆண்டிற்கான கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. 

இந்த நிலையில், மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வருகிற  செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் திண்டுக்கல், திருச்சி ,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:- "சுங்கச் சாவடிகளில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து, 90 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், இரண்டு முறை சென்றுவர 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.290ல் இருந்து 320 ரூபாயாகவும், இரண்டுமுறை சென்றுவர ரூ.440ல் இருந்து ரூ.480 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2770 இல் இருந்து ரூ.9,595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இப்படி ஒவ்வொரு வருடமும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது, வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty toll plaza charge rised in tamilnadu from september 1st


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->