கோவை கோனியம்மன் கோவில் தேர்திருவிழா - மாநகரில் போக்குவரத்து மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தின் காவல் தெய்வம் என்று மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா இன்று மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

இந்தத் திருவிழாவை முன்னிட்டு கோவையில், இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி மற்றும் சலிவன் வீதி போன்றவற்றில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன் படி, இலகு ரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. 

திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் காவல்  நிலையத்திற்கு எதிரே மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்திலும் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகரில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக போடப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport change in covai town for koniamman temple ther fesitival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->