சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் வரும் 09.07.2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஒட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

(i) கோயம்பேடுலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் 'யு' திருப்பம் மேற்கொண்டு ஈவி ஆர் சாலையை அடைந்து அமைந்தகரைக்கு செல்ல வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தில் வழியாக சென்று அடையலாம். 

(ii) அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசாரி கடக்கும்போது தவிர தடையின்றி செல்லலாம். 

(iii) அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பும்போது, பாதசாரி கடக்கும் போது தவிர, இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம். 

(iv) கோயம்பேடுவில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து, அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈ.வி.ஆர் சாலையிலும் நெரிசல் குறையும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic Change for EVR Salai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->