செடியிலேயே வீணாகும் தக்காளி - அச்சத்தில் வியாபாரிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்த மழையினால், தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்த தக்காளி பழங்கள் வீணாகி வருகின்றன.

மழையினால், தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் விலை உச்சத்தை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பயிரிடப்பட்டுள்ள செடியில் மழையினால் வேற்று செடிகளாக உள்ளது. 

இதேபோன்ற நிலை தென்மேற்கு பருவ மழைக் காலத்திலும் ஏற்பட்டதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழையிலும் அதே நிலைமை உருவாகியுள்ளது.

இரு ஒரு பக்கம் இருப்பினும் விவசாயிகள் மீண்டும் தக்காளி நடவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். அப்படி சாகுபடி செய்யப்படும் தக்காளி தை மாதத்தில் தான் அறுவடைக்கு வரும். 

இந்த இடைப்பட்ட காலத்தில், வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகளிடம் மீண்டும் தக்காளி விலை அதிகமாக உயரும் என்ற அச்சம் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto waste in tamilnadu for rain


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->