தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். 

இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் காலதாமதம் போன்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி,  இன்று (ஆகஸ்ட் 4ம் தேதி) மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

அதேபோல், ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special train thaambaram to kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->