இரட்டை இல்லை சின்னம் யாருக்கு? - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரு தரப்பில் இருந்தும் வாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்தத் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்று அதிமுகவினர் பதற்றத்திலேயே உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், ஓ.பன்னீர்செல்வம் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing admk symbol and flag case in chennai high court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->