இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில், முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். 

மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். 4 ஆயிரத்து 107 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்விற்காக 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளகள். 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களும், ஹால்டிக்கெட்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் பன்னிரண்டு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 10th public exam start


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->