திருவண்ணாமலை ஏடிஎம்கள் கொள்ளை சம்பவம்.. 5 மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கை..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 4 பகுதிகளில் தொடர் ஏடிஎம் கொள்ளை அரங்கேறியுள்ளது. மணலூர்பேட்டை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் வெல்டிங் மிஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேன்மலை எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு ரூபாய் 33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போரூர் பகுதியில் இயங்கி வந்த எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் கலசப்பாக்கம் பகுதி வில்வாராணி சாலையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம் மையத்திலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் கொள்ளை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளிலும் காவல்துறையினர் தடுப்பு அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNpolice vehicle inspection at 5 district borders for atm robbery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->