போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு! சாட்டை சுழற்றும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீப காலமாக கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் காவலரையே தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனால்பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு உடனடியாக ஆசிரியர்கள் புகார் அளிக்க வேண்டும். 

ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பற்களில் போதைப் பொருட்களால் ஏற்படும் கரை உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். 

புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை விற்கும் கடைகள் குறித்தான விவரங்களை காவல்துறைக்கு ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt ordered teachers conduct study on drug addiction prevention


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->