பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு விற்பனை - உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு விற்பனை - உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவு.!

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் மானியாக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 

இந்த விவாதத்திற்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். 

அப்படி பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை விற்பனை செய்வதால் பைகளில் உள்ள நுண்துகள்கள் உணவில் கலந்து உணவின் தரத்தை முற்றிலும் மாற்றி விடுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக அதனைத் தவிர்க்க வேண்டும். 

இதேபோன்று, "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எட்டு கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt action on hotels of hot food sale in plastic cover


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->