நாங்கள் மக்களின் உரிமைக்காக நிற்பவர்கள் - மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் மன்னம்பந்தல் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.655.44 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட கட்டடங்களுக்கான திறப்பு விழாவை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

அத்துடன் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது எக்ஸ் சமூக வலைதளத்தில், “நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன். 

சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்! நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இன்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவானது பாஜகவை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm stalin speech about prime minister modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->