திண்டிவனம் | ரெயில் தண்டவாளத்தில் விழுந்த மரம்! பயணிகள் சிரமம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து திண்டிவனம், விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு மழை பெய்து வந்தது.

இதனால் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மீதும் தண்டவாளத்திலும் அருகே இருந்த மரங்கள் தொடர்ச்சியாக விழ தொடங்கின. 

இதனால் எஞ்சின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தி விட்டார். மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. 

இதனை அடுத்து தண்டவாளத்தில் இருந்து மரம் அப்புறப்படுத்தப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பம், கன்னியாகுமரி உள்பட 8 விரைவு ரயில்கள் ஒரு மணி நேரம் கால தாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tindivanam trains tree fell


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->