காரைக்கால் || விடுதியில் தற்கொலைக்கு முயன்ற 3 பள்ளி மாணவிகள் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையம் பகுதியில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினந்திரும் வந்து சென்றும், விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் 3 பேர் காலணிக்கு பாலீஸ் போடும் பேஸ்ட்டை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சோகமாக காணப்பட்டனர். 

இதையறிந்த பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலை கேட்டு பதறியடித்து வந்த பெற்றோர் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவிகள் மூன்று பேரும் புத்தாண்டு கொண்டாட ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த மூன்று மாணவிகளும் காலணிக்கு போடும் பேஸ்ட்டை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.விடுமுறை அளிக்காததால், மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three school students sucide attempt in karaikkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->