கடலூரில் பயங்கரம் - அடுத்தடுத்து மோதிய தனியார் பேருந்து - பரிதாபமாக பறிபோன 3 உயிர்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் பயங்கரம் - அடுத்தடுத்து மோதிய தனியார் பேருந்து - பரிதாபமாக பறிபோன 3 உயிர்.!

கடலூரிலிருந்து சவும்யா என்ற தனியார் பேருந்து அறுபதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மதியம் வடலூர் வழியாக விருத்தாசலம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்தப் பேருந்து வடலூர் அடுத்த ராசாகுப்பம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சராகி உள்ளது.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்து கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கரவாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்தில், 24 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த கோர விபத்து குறித்து வடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for private bus accident in cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->