தூத்துக்குடி தொழிலாளி கொலையில் மூன்று பேர் கைது - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று அப்பகுதியில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மூன்று  தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் திருட்டு இருசக்கர வாகனத்தை குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் என்பவரிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சரவணனிடம் தகராறு செய்து இருசக்கரவாகனத்தை எடுத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தனது தந்தை முருகனுடன் சென்று திருட்டு இருசக்கரவாகனத்தை விற்பனை செய்த ஜெயக்குமாரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். 

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபமடைந்த முருகனும், சரவணனும் சேர்ந்து ஜெயக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. 

மேலும் இந்தக் கொலையில் முருகனின் மனைவி பொன் வைரவி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் முருகன், பொன் வைரவி, சரவணன் உள்ளிட்டோரை கைது செய்து, அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையின் பொது அவர்கள் தெரிவித்ததாவது, ஜெயக்குமார் திருட்டு இருசக்கர வாகனத்தை எங்களிடம் விற்பனை செய்துள்ளார். இதையறிந்த வாகனத்தின் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்து வாகனத்தை எடுத்து சென்றுவிட்டார். 

இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த நாங்கள் ஆத்திரத்துடன் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டோம். அப்போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் நாங்கள் அவரை தாக்கினோம். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டார் என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi employe murder case three peoples arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->