புதுச்சேரி மாநில எல்லையில் சுங்கச்சாவடி அமைப்பதை தடுக்க வேண்டும்..பொதுநல அமைப்புகள் வலியுறுத்தல்!
The setting up of a customs checkpoint at the Puducherry state border must be prevented Public welfare organizations emphasize
சட்ட விதிகளுக்கு முரணாக புதுச்சேரி மாநில எல்லையில் சுங்கச்சாவடி அமைப்பதை தடுக்க வேண்டி சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரபடும் என்று பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் புதுச்சேரி சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடிக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைக் கண்டித்து கடந்த 26-09-2025 அன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் பொது நல அமைப்புகள் அங்கே முற்றுகைப் போராட்டம் செய்தனர்..
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல மேலாளர்க்கும், தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களிடமும்,
திட்டு திட்டான நிலப்பரப்பு கொண்ட புதுச்சேரிக்குள் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும், புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை உண்டாக்கும் எனவும், புதிய சுங்கச்சாவடி அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு அளித்தார்.
மனுவின் மீது கூர்ந்த ஆய்வு செய்து கவனத்தில் கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை, புதுச்சேரி துணை மாவட்ட ஆட்சியர்(வில்லியனூர்) தலைமையிலே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மற்றும்மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு.ஜெகன்நாதன், திராவிட விடுதலைக் கழகம் திரு.லோகு. அய்யப்பன் ,தமிழர் களம் திரு.அழகர்,தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திரு.ராஜா, அம்பேத்கர் தொண்டர் படை திரு.பாவாடை ராயன்
மற்றும் பாகூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதுச்சேரிக்குள் சுங்கச்சாவடி அமைப்பதால் புதுச்சேரி கிராமப்புற மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்தனர்.
மேலும்சுங்கச்சாவடி அமைக்கும் பணியை மறுபரிசீலனை செய்யுமாறு மனு அளித்தனர். அரசு மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் சட்ட விதிகளுக்கு முரணாக புதுச்சேரி மாநில எல்லையில் சுங்கச்சாவடி அமைப்பதை தடுக்க வேண்டி சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
.
English Summary
The setting up of a customs checkpoint at the Puducherry state border must be prevented Public welfare organizations emphasize