தொடர்ந்து சிக்கும் திமுகவின் அமைச்சர்கள், சொத்துக்களை மீண்டும் முடக்கிய அமலாக்கத்துறை ! - Seithipunal
Seithipunal


திமுகவில் அமைச்சர் பதவி கிடைக்காத வீரத்தியில் பழி வாங்கும் செயலா? கட்சி மாறியதால் போட்டுக் கொடுக்கும் செயலா ?

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் கடந்த 2009 ஆம் ஆண்டு இணைந்தவர்.

கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறை பதிவு செய்த சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்க துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இப்போது சுமார் 160 ஏக்கர் நிலம் உட்பட 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வரிசையில் தற்பொழுது அமைச்சர் ராதாகிருஷ்ணன் இணைந்துள்ளார். கட்சி மாறி தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள அமைச்சர்கள் மீது மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The enforcement department has frozen the property of dmk ministers


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->