மதுரைல நிற்கிறோம்.. ஆட்சியை பிடிக்கிறோம்.. வா தலைவா.. வைரலாகும் போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார். மேலும் தனது அரசியல் கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என பெயர் சூட்டியுள்ள நடிகர் விஜய் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலை தமது இலக்கு அவர் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பை அவருடைய ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த போஸ்டரில் "அன்று சினிமாவில் நம்பர்.1 ஆக இருந்து அரசியல் பயணம் தொடங்கியவர் MGR... இன்று சினிமாவில் நம்பர் ஒன்றாக இருந்து அரசியல் பயணம் தொடங்குபவர் எங்கள் தளபதியார்... உன் முதல் அரசியல் வெற்றியை பதிவு செய்ய அழைக்கிறது மதுரை... வா தலைவா... நீ மதுரையில் இன்று வென்று ஆட்சி அமைக்க அழைக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamizhaga Vettri Kazhagam poster viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->